அமெரிக்க வணிகத் துறையின் தொழில்துறை மற்றும் பாதுகாப்பு வாரியம் (BIS) ஆனது தேசியப் பாதுகாப்பு தொடர்பான அதன் கட்டுப்படுத்தப்பட்ட நிறுவனப் பட்டியலில் 11 நிறுவனங்களைச் சேர்த்துள்ளது.
கூடுதலாக, BIS ஆனது இந்தியன் ரேர் எர்த்ஸ், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR), மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) ஆகிய மூன்று இந்திய நிறுவனங்களை நிறுவனப் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.
அமெரிக்க தேசியப் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்தும் நடத்தையை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தக் கூடிய ஒரு சக்திவாய்ந்த செயற் கருவியாக இந்த நிறுவனப் பட்டியல் உள்ளது.