அமெரிக்காவின் உலகளாவிய விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனமான நார்த்ரோப் க்ரம்மன், அதன் அடுத்த சிக்னஸ் காப்ஸ்யூலுக்கு (விண்கலம்) “எஸ்.எஸ். கல்பனா சாவ்லா” என்று பெயரிடுவதாகக் கூறியுள்ளது.
1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், சாவ்லா அவர்கள் எஸ்.டி.எஸ்-87' என்ற ஒரு குழுவில் கொலம்பியா விண்கலத்தில் (Space Shuttle Columbia) ஒரு திட்ட நிபுணராக நியமிக்கப் பட்டார்.
இது விண்வெளியில் பறக்கும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை இவருக்குச் சேர்த்தது.
அவரது இரண்டாவது விண்வெளிப் பயணம் 2001 ஆம் ஆண்டில் எஸ்.டி.எஸ்-107 குழுவினருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது நிகழ்ந்தது.
2003 ஆம் ஆண்டில் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்த போது அவர் பயணித்த விண்கலம் வெடித்ததால் அவர் தனது உயிரினை இழந்தார்.