TNPSC Thervupettagam

அமெரிக்க வெண்தலைக் கழுகு

July 23 , 2023 363 days 223 0
  • அமெரிக்க வெண்தலை (வழுக்கை) கழுகு இனமானது 2007 ஆம் ஆண்டில் அருகி வரும் உயிரினங்களின் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டது என்பது அதன் வளங்காப்பில் மேற் கொள்ளப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்கச் சாதனையினைக் குறிக்கிறது.
  • அப்போதிலிருந்து இந்தப் பறவைகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளது.
  • அமெரிக்க மீன் மற்றும் வனவிலங்குச் சேவை அமைப்பின் 2021 ஆம் ஆண்டு அறிக்கை என்பது, 2009 ஆம் ஆண்டிலிருந்து காடுகளில் உள்ள வெண்தலைக் கழுகுகளின் எண்ணிக்கையானது நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.
  • வெண்தலைக் கழுகின் இயற்கை வாழ்விடங்கள் ஆனது, கனடாவின் பெரும்பாலான பகுதிகள், அமெரிக்கா மற்றும் வடக்கு மெக்சிகோ ஆகியப் பகுதிகளை உள்ளடக்கிய வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கியது.
  • வட அமெரிக்காவைச் சேர்ந்த ஒரே கடல்சார் கழுகு இனம் இதுவாகும்.
  • வெண்தலைக் கழுகுகளின் சராசரி ஆயுட்காலம் 20 முதல் 30 ஆண்டுகள் ஆகும்.
  • பெண் வெண்தலைக் கழுகுகள் ஆண்களை விட அளவில் சற்று பெரியவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்