TNPSC Thervupettagam

அமெரிக்கக் கடற்படைக் கப்பலின் முதல் பழுதுநீக்கப் பணி

August 10 , 2022 713 days 355 0
  • அமெரிக்கக் கடற்படைக் கப்பலானது சென்னை எண்ணூரில் உள்ள L&T என்ற நிறுவனத்தின் காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்திற்குப் பழுது மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக வந்தடைந்தது.
  • இது இந்திய - அமெரிக்க இராணுவக் கூட்டுறவிற்கு என்று புதிய உத்தி சார்ந்த ஒரு பரிமாணத்தைச் சேர்க்கிறது.
  • இந்தியக் கப்பல் கட்டும் தளத்தில் முதன்முறையாக ஒரு அமெரிக்க கடற்படைக் கப்பல் பழுது பார்க்கப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற இந்திய - அமெரிக்க 2+2 பேச்சு வார்த்தையின் போது இந்தியக் கப்பல் கட்டும் தளங்களின் சேவைகள் மற்றும் நிபுணத்துவத்தைப் பெறுவதற்கு அமெரிக்கக் கடற்படைக்கு அனுமதி வழங்குவதாக இந்தியா முன்மொழிந்தது.
  • தளவாடங்கள் பரிமாற்றப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (LEMOA) ஒரு பகுதியாக, இந்திய கப்பல் கட்டும் தளங்களில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களைப் பழுது பார்க்கச் செய்வதற்கு என்று வழி வகை செய்யப்பட்டது.
  • தளவாடங்கள் பரிமாற்றப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது இந்திய மற்றும் அமெரிக்கக் கடற்படைகளுக்கு இடையே சரக்குகள் மற்றும் போர் சார்ந்த பொருட்களின் மீதான பரிமாற்றத்தை எளிதாக்குவதற்காக கையொப்பமானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்