ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 4 அன்று அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தை அமெரிக்கா அனுசரிக்கின்றது.
இது 1776-ஆம் ஆண்டில் பிரிட்டனிடமிருந்து அமெரிக்கா சுதந்திரம் அடைந்ததற்கானப் பிரகடனத்தை வெளியிட்டதன் நினைவாகும்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது ஜூலை 2 அன்று 13 அமெரிக்கக் குடியேற்றங்களின் விடுதலையை அறிவிப்பதற்காக காங்கிரஸ் வாக்களித்திருந்தது. ஆனால் இது ஜூலை 4 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தாமஸ் ஜெஃபர்சன்
தாமஸ் ஜெஃபர்சன் ஐக்கிய அமெரிக்காவின் இந்த சுதந்திரப் பிரகடனத்தின் முதன்மையான ஆசிரியர் ஆவார்
ஐக்கிய அமெரிக்காவின் நிறுவனத் தலைவர் இவராவார்.
இவர் ஐக்கிய அமெரிக்காவின் மூன்றாவது குடியரசுத் தலைவராக 1801 ஆம் ஆண்டு முதல் 1809 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
முன்னதாக இவர் அமெரிக்காவின் இரண்டாவது துணைக் குடியரசுத் தலைவராக 1797 ஆம் ஆண்டு முதல் ஆம்1801 ஆண்டு வரை பதவி வகித்தார்.
ஜனநாயகத்தையும் குடியரசுக் கொள்கையையும் தனிமனித உரிமைகளையும் முன் நிறுத்தியவர் இவராவார்.
Post Views: 632
Nanjil Siva June 30, 2023
அமெரிக்க சுதந்திர தினத்தைப் பற்றிய முக்கியமான நிகழ்வுகளை தேர்ந்தெடுத்து சுருக்கமாக குறிப்பிட்டுள்ளீர்கள்... வாழ்த்துக்கள்.