அமெரிக்கா ஜெருசலேத்தில் தனது இணைத் தூதரகத்தை இஸ்ரேலில் உள்ள புதிய தூதரகத்துடன் இணைத்து ஒற்றைத் தூதரக அலுவலகமாக மாற்றிட திட்டமிட்டிருக்கின்றது.
இந்த முடிவு தனது தூதரக நடவடிக்கைகளின் செயல்திறன் மற்றும் விளைவு ஆகியவற்றை மேம்படுத்திட அமெரிக்காவால் மேற்கொள்ளப்படும் உலகளாவிய முயற்சிகளின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இது 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்ததற்குப் பிறகு எடுக்கப்பட்டிருக்கின்றது.
அமெரிக்கா தனது தூதரகத்தை 2018 ஆம் ஆண்டு மே மாதம், டெல் அவிவ் நகரத்திலிருந்து ஜெருசலேமிற்கு மாற்றியது.