TNPSC Thervupettagam

அமெரிக்கப் பாராளுமன்றத்தில் கலவரம்

January 11 , 2021 1341 days 617 0
  • அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள அமெரிக்கப் பாராளுமன்ற (Capitol Building) கட்டிடத்திற்குள் அத்து மீறி நுழைந்தனர்.
  • 1800 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம், அமெரிக்க காங்கிரஸ் அவை கூடும் இடமாகும்.
  • அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனின் தேர்தல் வெற்றியை அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்க அமெரிக்க காங்கிரஸ் கூட்டப் பட்டது.
  • ஏற்கனவே நடக்கும் வன்முறை ஆர்ப்பாட்டங்களுக்கு மேலும் தூண்டுதல்களைத் தடுக்கும் விதமாக அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு 12 மணி நேரம் முடக்கப்பட்டது.
  • 25வது சட்டத் திருத்தத்தைச் செயல்படுத்தவும், டிரம்பைப் பதவியில் இருந்து நீக்கவும் துணை அதிபரான மைக் பென்ஸை பலர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
  • 25வது சட்டத் திருத்தமானது ஓர் அமெரிக்க அதிபர் அல்லது துணை அதிபர் எவ்வாறு வெற்றி பெறலாம் அல்லது எவ்வாறு பதவி மாற்றம் நிகழும் என்பதற்கான நடைமுறைகளை வகுக்கிறது.
  • இந்தச் சட்டத் திருத்தத்தின் படி, பதவியில் இருக்கும் போது அதிபர் இறந்து விட்டால் அல்லது ராஜினாமா செய்து விட்டால் அல்லது பதவியில் இருந்து நீக்கப் பட்டால் துணை அதிபர், அதிபர் பொறுப்பை ஏற்கலாம்.
  • அமெரிக்காவின் 35வது அதிபர் ஜான் கே கென்னடி படுகொலை செய்யப்பட்ட பின்னர் 1965 ஆம் ஆண்டு ஜூலை 6, அன்று காங்கிரஸால் இந்த 25வது திருத்தம் முன்மொழியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்