TNPSC Thervupettagam

அமெரிக்கா-இந்தியா COMPACT முன்னெடுப்பு

February 16 , 2025 11 days 60 0
  • வாஷிங்டனில் நடைபெற்ற சந்திப்பின் போது அமெரிக்கா-இந்தியா ஆகிய நாடுகள் இந்திய-அமெரிக்க இடையிலான மிகவும் விரிவான மற்றும் உலகளாவிய உத்தி சார் கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.
  • இரு நாடுகளும் '21 ஆம் நூற்றாண்டிற்கான அமெரிக்க-இந்திய COMPACT (இராணுவக் கூட்டாண்மைக்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல், துரிதப்படுத்தப்பட்ட வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம்)' என்ற புதிய முன்னெடுப்பினைத் தொடங்கின.
  • இது "ஒத்துழைப்பின் முக்கியத் தூண்களில் மிகவும் மாறுதல் மிக்க மாற்றத்தினை முன்னேற்றிச் செல்லுதல்" நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அமெரிக்க-இந்திய முக்கியப் பாதுகாப்பு கூட்டாண்மைக்கான இந்தப் புதிய 10 ஆண்டு கட்டமைப்பில் கையெழுத்திட இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.
  • திட்டம் 500 ஆனது, 2030 ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தினை 500 பில்லியன் டாலராக இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, குறைகடத்திகள் மற்றும் விண்வெளி ஆகிய சில துறைகளில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதற்காக என்று அவை "அமெரிக்கா-இந்தியா TRUST" முன்னெடுப்பினைத் தொடங்கின.
  • 26/11 ஆம் ஆண்டு மும்பை தாக்குதல்களுக்காக தஹாவ்வூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா ஒப்புதல் அளித்தது.
  • அமெரிக்காவினை மீண்டும் பெருஞ்சிறப்பு உடையதாக்குதல் (MAGA) என்ற அமெரிக்க நாட்டின் தொலைநோக்குத் திட்டமும், இந்தியாவினை மீண்டும் மிகப் பெருஞ்சிறப்பு உடையதாக்குதல் (MIGA) என்ற இந்தியாவின் ஒரு பெரும் கருத்தாக்கமும் இணைந்து ஒரு "மாபெரும் கூட்டாண்மையாக" கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்