அமெரிக்காவினுடைய நீண்டகால கொள்கையிலிருந்து மாறுபட்டு, தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேம் நகரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளார்.
மேலும் இஸ்ரேலின் டெல் அவிவ்-ல் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை துவங்குமாறும் அரசுத் துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜீடாயிசம், கிறிஸ்துவம் மற்றும் இஸ்ஸாமியம் ஆகியவற்றின் புனிதத் தலமாக ஜெருசலேம் நகரம் உள்ளது.
ஜெருசலேம் நகரின் தனித்துவம் மிக்க மதம் மற்றும் கலாச்சார முக்கியத்துவங்களின் காரணமாக தீர்மானம் 181(II)-ன் கீழ் 1947-ல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட பாலஸ்தீனப் பகுதியானது (British Mandate of Palestine) ஆனது இரு பகுதிகளாக அரபு நாடுகளுக்கும், யூதர்களுக்கும் என பிரிப்பதற்கு ஐநாவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, ஜெருசலேம் இரு பிரிவினருக்கும் இல்லாமல் ஐ.நா. பொறுப்பாட்சி மன்றத்தின் கீழ் (UN Trusteeship Council) தனிப்பட்ட சர்வதேச கட்டுப்பாட்டுப் பகுதியாக (Corpus separatum) நிர்ணயிக்கப்பட்டது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளாலும் ஜெருசலேம் அவற்றின் தலைநகராக கோரப்படுகின்றது.
1967-இல் இஸ்ரேலிய-அரபுப் போரின்போது ஜெருசலேம் நகரமானது இஸ்ரேலினால் கைப்பற்றப்பட்டது. இருப்பினும் இது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவில்லை.
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அமெரிக்கா அங்கீகரித்ததற்கு அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஐநா அவை என அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.