கிரக ஆய்வு மற்றும் ஆராய்ச்சி குறித்த அமெரிக்கா தலைமையிலான ஒரு சர்வதேசக் கூட்டாண்மையான மூன்று ஆண்டுகள் பழமையான ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
இதுவரை ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐக்கியப் பேரரசு, பிரான்சு, கனடா உள்ளிட்ட 26 நாடுகள் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
13 கொள்கைகளின் தொகுப்பான ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையானது ஆர்ட்டெமிஸ் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும்.
இது விண்வெளி வீரர்களை சந்திரனின் மேற்பரப்பினை அடையச் செய்து, அங்கு ஒரு விண்வெளி முகாமை உருவாக்கவும், அங்கு தீவிரமான விண்வெளி ஆய்வுகளை மேற் கொள்ளச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது சந்திரன், செவ்வாய், வால் நட்சத்திரங்கள் மற்றும் குறுங்கோள்கள் குறித்த பொது ஆய்வு மற்றும் பயன்பாட்டிற்கான கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் ஒரு தொகுப்பினைக் கொண்டுள்ளது.