TNPSC Thervupettagam

அமெரிக்கா தலைமையிலான ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை

July 14 , 2023 373 days 217 0
  • கிரக ஆய்வு மற்றும் ஆராய்ச்சி குறித்த அமெரிக்கா தலைமையிலான ஒரு சர்வதேசக் கூட்டாண்மையான மூன்று ஆண்டுகள் பழமையான ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
  • இதுவரை ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐக்கியப் பேரரசு, பிரான்சு, கனடா உள்ளிட்ட 26 நாடுகள் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
  • 13 கொள்கைகளின் தொகுப்பான ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையானது ஆர்ட்டெமிஸ் திட்டத்துடன்  தொடர்புடையது ஆகும்.
  • இது விண்வெளி வீரர்களை சந்திரனின் மேற்பரப்பினை அடையச் செய்து, அங்கு ஒரு விண்வெளி முகாமை உருவாக்கவும், அங்கு தீவிரமான விண்வெளி ஆய்வுகளை மேற் கொள்ளச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது சந்திரன், செவ்வாய், வால் நட்சத்திரங்கள் மற்றும் குறுங்கோள்கள் குறித்த பொது ஆய்வு மற்றும் பயன்பாட்டிற்கான கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் ஒரு தொகுப்பினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்