2018 ஆம் ஆண்டு நவம்பர் 06 அன்று 2018 ஆம் ஆண்டிற்கான அமெரிக்கத் தேர்தல்கள் நடைபெற்றன.
இந்த இடைக்காலத் தேர்தலானது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க அதிபரான டெனால்டு டிரம்ப் ஆட்சியின் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்றது.
அமெரிக்காவின் செனட்டில் மொத்தம் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் அமெரிக்க மக்கள் பிரதிநிதித்துவ அவையில் மொத்த உள்ள 435 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது.
செனட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 03 ஆம் தேதி முதல் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 03 ஆம் தேதி வரை ஆறு ஆண்டுகளுக்கு அப்பதவியில் இருப்பார்கள்.
2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில், மக்கள் பிரதிநிதித்துவ அவையில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அடுத்த சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதில் அக்கட்சி ஆதிக்கம் செலுத்தவிருக்கிறது.
செனட்டில் குடியரசுக் கட்சியானது மிகச்சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமெரிக்க காங்கிரசில் பிளவை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்க கூட்டு அரசாங்கத்தின் சட்டமன்றப் பிரிவின் அடுத்த சந்திப்பானது அமெரிக்க காங்கிரஸின் 116-வது சந்திப்பாகும். அமெரிக்க காங்கிரஸானது செனட் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ அவை ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.
தற்போதைய அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்பின் மூன்றாவது மற்றும் நான்காவது ஆண்டு பதவிக் காலத்தின்போது அமெரிக்க காங்கிரஸின் சந்திப்பானது 2019 ஆம் ஆண்டு ஜனவரி 3 முதல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 3 வரை வாஷிங்டன் C.யில் நடைபெறவிருக்கிறது.