TNPSC Thervupettagam

அமெரிக்கா - பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகல்

November 9 , 2019 1716 days 673 0
  • அமெரிக்கர்கள் மீதான "நியாயமற்ற பொருளாதாரச் சுமையை" மேற்கோள் காட்டி காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்கா ஐக்கிய நாடுகளுக்கு முறையாக அறிவித்துள்ளது.
  • அமெரிக்காவின் அதிபரான டொனால்ட் டிரம்ப் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் திட்டத்தினை அறிவித்திருந்தார்.
  • உலகின் முதலாவது சர்வதேச காலநிலை ஒப்பந்தமான கியோட்டோ உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகுவதாக 2001 ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபரான ஜார்ஜ் டபிள்யூ புஷ் அறிவித்தார்.
  • பாரிஸ் ஒப்பந்தம் என்பது பசுமை இல்ல வாயு உமிழ்வின் குறைப்பு, தழுவல் மற்றும் அதற்கான நிதி ஆகியவற்றைக் கையாளும் காலநிலை மாற்றம் மீதான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பின் கீழ் உள்ள ஒரு ஒப்பந்தமாகும்.
  • இது 2015 ஆம் ஆண்டில் பாரிஸில் நடைபெற்ற உறுப்பு நாடுகளின் மாநாடு -  21 அல்லது 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான  மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • பாரிஸ் ஒப்பந்தமானது நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று (புவி தினம்) கையொப்பமிட அனுமதிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்