உலக வர்த்தக அமைப்பிடம் (WTO – World Trade Organization) அமெரிக்காவிற்கு எதிராக ஒரு சர்ச்சையானப் புகாரை துருக்கி பதிவு செய்துள்ளது.
இது துருக்கியிலிருந்து அமெரிக்கா செய்யும் எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிகள் மீது விதிக்கப்படும் கூடுதல் சுங்கவரிகளை அடுத்து எடுக்கப்பட்டது ஆகும்.
ஒரு தோல்வியடைந்த இராணுவப் புரட்சியில் ஈடுபட்டதாகக் கூறி சிறையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, அடைக்கப்பட்டுள்ள அமெரிக்கப் போதகரை விடுதலை செய்யக் கோரிய அமெரிக்காவின் வேண்டுகோளை துருக்கி நிராகரித்ததற்காக இந்த கூடுதல் வரி விதிக்கப்பட்டது.