TNPSC Thervupettagam

அமெரிக்காவின் 47வது அதிபர்

November 9 , 2024 13 days 92 0
  • அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸை வீழ்த்தி அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் J. டிரம்ப் பதவியேற்றார்.
  • 1884 மற்றும் 1892 ஆம் ஆண்டுகளில் அதிபரான க்ரோவர் க்ளீவ்லேண்டிற்குப் பிறகு, வெள்ளை மாளிகையில் ஒரு அதிபர் தொடர்ச்சியாக இல்லாமல் இரண்டு முறை பதவி வகிப்பது இது இரண்டாவது முறையாகும்.
  • அமெரிக்கா நாடானது வாக்காளர் குழு என்ற ஒரு முறையைப் பின்பற்றுகிறது.
  • மக்கள் தொகையின் அடிப்படையில், இந்த வாக்காளர் குழுவானது மாகாணங்களுக்கு தனது வாக்குகளை ஒதுக்குகின்றன.
  • மொத்தம் 538 தேர்தல் வாக்காளர் குழு வாக்குகள் உள்ளன; 435 பிரதிநிதிகள் சபை, 100 பேரவை இடங்கள் மற்றும் வாஷிங்டன் DC மாகாணத்தில் 3 இடங்கள்.
  • முதலாவதாக, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன் மாகாணங்களில் சாத்தியமான வாக்காளர்களைத் தேர்ந்தெடுக்கின்றன.
  • பின்னர், ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள பொதுமக்கள் பொதுத் தேர்தலின் போது வாக்களிப்பதன் மூலம் தங்கள் வாக்காளர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
  • எனவே, பொதுமக்கள் உண்மையில் ஒரு வாக்காளர்களை தேர்ந்தெடுக்கிறார்களே தவிர, பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் போது நேரடியாக அதிபரைத் தேர்ந்தேடுக்க வில்லை.
  • அதிபர் தேர்தலில் வெற்றிபெற ஒரு வேட்பாளருக்கு குறைந்தது 270 வாக்காளர்களின் வாக்குகள் தேவை.
  • அமெரிக்க அரசியலமைப்பின் படி, ஒரு வேட்பாளர், அதிபர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவதற்கு, நாட்டில் இயற்கையாகப் பிறந்த குடிமகனாகவும், 35 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராகவும், 14 ஆண்டுகள் அமெரிக்காவில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.
  • J.D.வான்ஸ் அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • புதிய அதிபரின் பதவிக்காலம் ஜனவரி 20 ஆம் தேதி தொடங்குகிறது என்ற நிலையில் இந்த தேதியானது பதவியேற்பு நாளுமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்