நிலவின் தென் துருவத்திற்கு அருகே தரையிறங்கிய பின்னர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவின் மேற்பரப்பில் அமெரிக்கா தனது முதல் தரையிறக்கத்தினை மேற் கொண்டுள்ளது.
ஒடிசியஸ் என்ற எந்திர தரையிறங்குக் கலமானது, நிலவின் தென் துருவத்திற்கு அருகில் உள்ள மலாபெர்ட் A என்ற பள்ளத்தில் திட்டமிட்டபடி தரையிறங்கியது.
இன்று வரை, முன்னாள் சோவியத் ஒன்றியம், சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கி உள்ளன.
இருப்பினும், நிலவிற்கு மனிதர்களை அனுப்பிய ஒரே நாடு அமெரிக்கா ஆகும்.