TNPSC Thervupettagam

அமெரிக்காவின் டிரினிட்டி சோதனை

July 21 , 2020 1497 days 606 0
  • சரியாக 75 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 16 ஆம் தேதியன்று அமெரிக்க விஞ்ஞானிகள் கேட்ஜெட்  என்ற பெயரில் ஒரு சோதனை செய்தனர்.
  • இது உலகின் முதலாவது அணு குண்டாகும்.
  • டிரினிட்டி என்பது இந்த அணு ஆயுதச் சாதனத்தின் முதலாவது வெடிப்புச் சோதனைக்கு இடப்பட்ட ஒரு பெயராகும்.
  • இந்தச் சோதனையானது நியு மெக்சிகோவிற்கு அருகில் ஜோர்னாடா டெல் முயர்டோ பாலைவனத்தில் நடத்தப்பட்டது.
  • கேட்ஜெட்எனப்பட்ட இந்தக் குண்டானது அமெரிக்காவின் தலைமையிலான மன்ஹட்டான் திட்டத்தின் ஒரு பகுதியாக மேம்படுத்தப்பட்டதாகும்.
  • மன்ஹட்டான் திட்டமானது இரண்டாவது உலகப் போரின் போது முதலாம் முறையாக அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு அணு ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டம் ஆகும்.
  • இது அமெரிக்காவின் தலைமையில் ஐக்கியப் பேரரசு மற்றும் கனடாவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்