டிரம்பின் நிர்வாகம் ஆனது, மூலதன வரவுகள் மீது பண மதிப்பு சார்ந்த குறுகிய கால வர்த்தகம் மீதான வரி / டோபின் வரி விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது என்ற ஒரு நிலையில் இது உலகளாவிய நிதிச் சந்தைகளை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.
உலகச் சந்தையில், பண மதிப்பு சார்ந்தப் பரிவர்த்தனைகளுக்கு 0.0005% வரி விதிப்பது என்ற டோபினின் கருத்தாக்கத்தினைப் பயன்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான வருவாயை அதிகரிக்கலாம் என்பதோடு மேலும் இது பரிவர்த்தனைகள் அல்லது நிதி பாய்வுகளைக் குறைக்காது.
டோபின் வரி என்பது குறுகிய கால ஊக வர்த்தகத்தினை தடுப்பதை ஒரு நோக்கமாகக் கொண்ட அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகள் மீதான வரியாகும்.
இது நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான ஜேம்ஸ் டோபின் என்பவரால் 1972 ஆம் ஆண்டில் பிரெட்டன் வுட்ஸ் உடன்படிக்கை கட்டமைப்பின் வீழ்ச்சிக்குப் பிறகு, பணச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ற நடவடிக்கையினை மேற்கொள்ளும் வகையில் முன்மொழியப்பட்டது.
இந்தியாவின் பங்குகளின் பரிவர்த்தனை மீதான வரி (2004) ஆனது, பங்குச் சந்தை பரி வர்த்தனைகள் மீதான டோபின் வரியாகச் செயல்படுகிறது.