240 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் சக்தி மற்றும் வலிமையின் சின்னமாக விளங்கும் வெண்தலைக் கழுகு ஆனது, தற்போது அந்த நாட்டின் ஒரு அதிகாரப்பூர்வ தேசியப் பறவையாக மாறியுள்ளது.
வெண்தலைக் கழுகு ஆனது பல ஆண்டுகளாக அமெரிக்காவின் ஒரு தேசிய சின்னமாக உள்ளதோடு இது 1782 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க ஆவணங்களிலும் அமெரிக்காவின் அரசு முத்திரையிலும் பயன்படுத்தப்படுகிறது.
வெண்தலைக் கழுகு ஆனது வட அமெரிக்காவினைத் தாயகமாகக் கொண்டது.
அமெரிக்காவின் அரசு முத்திரை என்பது ஒப்பந்தங்கள் மற்றும் ஆணையங்கள் போன்ற அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பயன்படுத்தப்படும் ஒரு தேசிய சின்னம் ஆகும்.
1782 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட இதன் இறுதி வடிவமைப்பு ஆனது ஒரு வெண் தலைக் கழுகு, ஆலிவ் மரத்தின் ஒரு கிளை, அம்புகள், ஒரு கொடி போன்ற கேடயம், E Pluribus Unum (இது "பலவற்றுள், ஒன்று" என பொருள்படுகிறது) என்ற சொற்றொடர் மற்றும் விண்மீன் திரள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்த வெண்தலைக் கழுகு ஆனது 1940 ஆம் ஆண்டின் தேசியச் சின்னச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப் படுவதோடு இந்த உயிரினத்தின் விற்பனை அல்லது வேட்டையாடலை இது சட்ட விரோதமாக்கியது.