TNPSC Thervupettagam

அமெரிக்காவின் பரஸ்பர சுங்க வரிகள்

April 8 , 2025 11 days 62 0
  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா வர்த்தகம் மேற்கொள்ளும் சுமார் அனைத்து நாடுகளையும் குறி வைத்து பல்வேறு பரஸ்பரச் சுங்க வரிகளை அறிவித்து உள்ளார்.
  • 2023 ஆம் ஆண்டில், அமெரிக்க இறக்குமதிகள் அதன் ஏற்றுமதியை விட 1.1 டிரில்லியன் டாலர் அதிகமாக இருந்தன என்பதோடு அமெரிக்காவைப் போல வேறு எந்த நாட்டிலும் பெரிய அளவிலான வர்த்தகப் பற்றாக்குறை பதிவாகவில்லை.
  • ஏப்ரல் 02 ஆம் தேதியை "விடுதலை நாள்" என்று டிரம்ப் குறிப்பிட்டு வந்தார்.
  • சீனப் பொருட்கள் சுமார் 34 சதவீத பரஸ்பர வரியை எதிர்கொள்ள உள்ளன என்பதோடு இது சீனப் பொருட்களின் மீதான ஒட்டு மொத்த வரியை 54 சதவீதமாக உயர்த்துகிறது.
  • ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து இறக்குமதிகள் மீதும் சுமார் 34% பரஸ்பர சுங்க வரிகளை விதிக்க உள்ளதாக சீனாவும் அறிவித்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில், சீனாவானது அமெரிக்காவின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்தது.
  • கம்போடியா மிக அதிக அளவிலான வரிகளால் (49%) பாதிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா மீது 26% விகித சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்