TNPSC Thervupettagam

அமெரிக்காவின் பிறப்புரிமை சார் குடியுரிமை

December 19 , 2024 3 days 63 0
  • அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் பிறப்புரிமை சார் குடியுரிமையை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
  • பிறப்புரிமை சார் குடியுரிமைக்கு, அமெரிக்க அரசியலமைப்பின் 14வது திருத்தத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
  • பிறப்புரிமை சார் குடியுரிமை என்பதற்கு அமெரிக்க நாட்டின் எல்லைக்குள் பிறந்த எவரும் தானாகவே அமெரிக்காவின் குடியுரிமை பெறுகிறார்கள் என்று பொருளாகும்.
  • சுற்றுலாப் பயணிகளின் குழந்தைகள், குறுகிய கால நுழைவு இசைவுச் சீட்டு மூலம் அமெரிக்கக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆவணமற்றக் குடியேற்ற வாசிகளின் குழந்தைகள் இதில் அடங்குவர்.
  • அரசியலமைப்பில் ஏதேனும் மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கு, நிர்வாகத்திற்கு காங்கிரஸின் இரு அவைகளிலும் – பேரவை மற்றும் பிரதிநிதிகள் சபையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை.
  • கூடுதலாக, இது அனைத்து மாகாணச் சட்டமன்றங்களில் நான்கில் மூன்றில் ஒரு பங்கு பெரும்பான்மையினால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  • 2019 ஆம் ஆண்டில், புலம்பெயர்வு கொள்கை நிறுவனம் ஆனது 2019 ஆம் ஆண்டில் 18 வயதிற்குட்பட்ட 5.5 மில்லியன் குழந்தைகள் அந்நாட்டில் குறைந்தபட்சம் அவர்தம் பெற்றோரில் ஒருவராவது சட்டவிரோதமான முறையில் வாழ்ந்ததாக மதிப்பிட்டுள்ளது என்பதோடு இது அமெரிக்க குழந்தை மக்கள் தொகையில் 7% ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்