வணிக ரீதியான கோழி வளர்ப்பு பகுதிகளில், அதிக நோய்த்தொற்று மிக்க பறவைக் காய்ச்சல் (HPAI) வைரஸின் கொடிய H7N9 வகை தொற்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பறவைக் காய்ச்சல் A (H7N9) என்பது கடந்த காலங்களில் பறவைகளில் கண்டறியப் பட்ட இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களின் ஒரு துணை வகையாகும்.
இந்த வைரஸ் ஆனது, முதன்முதலில் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சீனாவில் கண்டறியப் பட்டது.
இது 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு அமெரிக்காவில் பதிவாகும் ஒரு இரண்டாவது தொற்றுநோயாகும்.
H7N9 பறவைக் காய்ச்சல் வைரஸ் ஆனது, இந்த கொடிய வைரசினால் பாதிக்கப்பட்ட மனிதர்களில் சுமார் 40 சதவீதம் பேர் உயிரிழந்ததுடன், மிக அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.