TNPSC Thervupettagam

அமெரிக்காவில் H7N9 பறவைக் காய்ச்சல் தொற்று

March 23 , 2025 8 days 66 0
  • வணிக ரீதியான கோழி வளர்ப்பு பகுதிகளில், அதிக நோய்த்தொற்று மிக்க பறவைக் காய்ச்சல் (HPAI) வைரஸின் கொடிய H7N9 வகை தொற்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
  • பறவைக் காய்ச்சல் A (H7N9) என்பது கடந்த காலங்களில் பறவைகளில் கண்டறியப் பட்ட இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களின் ஒரு துணை வகையாகும்.
  • இந்த வைரஸ் ஆனது, முதன்முதலில் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சீனாவில் கண்டறியப் பட்டது.
  • இது 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு அமெரிக்காவில் பதிவாகும் ஒரு இரண்டாவது தொற்றுநோயாகும்.
  • H7N9 பறவைக் காய்ச்சல் வைரஸ் ஆனது, இந்த கொடிய வைரசினால் பாதிக்கப்பட்ட மனிதர்களில் சுமார் 40 சதவீதம் பேர் உயிரிழந்ததுடன், மிக அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Top