அமெரிக்காவில் துருவ சுழல் காற்று மற்றும் குளிர்கால புயல்கள் 2025
January 10 , 2025 3 hrs 0 min 19 0
துருவச் சுழல் விரிவடைவதால் மிக கடுமையான குளிர்காலப் புயல்களை அமெரிக்கா எதிர்கொண்டு வருகிறது.
துருவச் சுழல் ஆனது, முதன்மையாக வடக்கு அரைக் கோளத்தின் மைய அட்சரேகை முதல் உயர் அட்சரேகைகளில் அமைந்துள்ள நாடுகளை பாதிக்கிறது.
துருவச் சுழல் ஆனது, சுமார் 155mph (250km/h) என்ற அளவு காற்றின் வேகத்துடன் வட துருவத்தைச் சுற்றி இடஞ்சுழி திசையில் சுழல்கிறது.
அடிவளிமண்டலம் சார்ந்தது மற்றும் படையடுக்கு மண்டலம் சார்ந்தது என இரண்டு வகையான துருவ சுழல்கள் உள்ளன.
அடிவளிமண்டலம் சார்ந்த துருவச் சுழல் ஆனது, பெரும்பாலான வானிலை நிகழ்வுகள் நிகழும் வளிமண்டலத்தின் தாழ் அடுக்கில் ஏற்படுகின்றன.
இது மேற்பரப்பில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் முதல் 15 கிலோ மீட்டர் வரை நீண்டு உள்ளது.
இந்தச் சுழல் ஆனது வடக்கு அட்சரேகைகள் முழுவதுமுள்ள பகுதிகளில் மிதமான ஒரு வானிலை சூழலை உருவாக்குகிறது.
படையடுக்கு மண்டலத் துருவச் சுழல் ஆனது 15 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் உயரத்தில் ஏற்படுகிறது.
அடிவளிமண்டல துருவச் சுழல் போலல்லாமல், படையடுக்கு மண்டல துருவச் சுழல்கள் கோடை காலத்தில் மறைந்து இலையுதிர் காலத்தில் மிகவும் வலிமையான அளவில் தோன்றுகின்றன.