ஈக்வடார் நாட்டின் மக்கள் யாசுனி தேசியப் பூங்காவிற்குள் அமைந்துள்ள பாதுகாக்கப் பட்ட பகுதியில் எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
இது உலகில் மிக அதிக அளவில் பல்லுயிர்ப் பெருக்கம் கொண்ட பகுதிகளில் ஒன்று ஆகும்.
இந்தப் பகுதியில் இதுவரையில் மனிதத் தொடர்பு மேற்கொள்ளப்படாத தகேரி மற்றும் தாரோமெனானி எனப்படும் இரண்டு பழங்குடியினர் குழுக்கள் வசிக்கின்றனர்-
1989 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ அமைப்பானது யாசுனி பகுதியினை உலக உயிர்க் கோளக் காப்பகமாக நியமித்தது.
அதன் வருவாய் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமானது என்று வலியுறுத்தி, எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதற்கு ஆதரவளிக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கு இந்த முடிவு எதிர்மறையாக அமைந்துள்ளது.