TNPSC Thervupettagam

அமைச்சர்களுக்கு வருமான வரி

June 30 , 2024 147 days 226 0
  • மாநில அமைச்சர்களின் வருமான வரியினை மாநில அரசு செலுத்தாமல், அவர்களே தங்கள் வருமான வரியைச் செலுத்த வேண்டும் என்று மத்தியப் பிரதேச மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
  • அமைச்சர்களின் ஊதியம் மற்றும் சலுகைகளுக்கு மாநில அரசு வருமான வரி செலுத்த வழிவகை செய்யும் 1972 ஆம் ஆண்டு விதியை அம்மாநில அரசானது ரத்து செய்துள்ளது.
  • முன்னதாக இதர பிற மாநில அரசுகளும் அமைச்சர்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கும் விதிகளைத் திருத்தியமைத்துள்ளன.
  • 2019 ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேச மாநில அமைச்சரவையானது முதல்வர் மற்றும் பிற அமைச்சர்கள் தங்கள் சொந்த வருமான வரியினைச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டத்தைத் திருத்த முடிவு செய்தது.
  • 2022 ஆம் ஆண்டில் இமாச்சலப் பிரதேச மாநில அமைச்சரவையானது அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் சொந்த வருமான வரியைச் செலுத்துவர் என்று கூறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்