- 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரஷ்யாவில் நடைபெற உள்ள அமைதி திட்டம் (Peace Mission) எனும் பன்-நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுப்போர் பயிற்சியில் (multi-nation counter-terror exercise) பரம போட்டி நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் முதல் முறையாக பங்கெடுக்க உள்ளன.
- சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organisation - SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- அமைதி திட்டம் எனும் இந்த கூட்டுப் போர் பயிற்சியானது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பினுடைய கட்டமைப்பின் கீழ் இரஷ்யாவில் நடைபெற உள்ளது.
- இந்த போர் பயிற்சியானது இரஷ்யாவின் உரால் மலைகளில் (Ural Mountains) நடைபெற உள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பினைப் பற்றி
- சீனாவின் பெய்ஜிங்-ஐ தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது யூரேஸியப் பிராந்தியத்தின் (Eurasian) ஓர் அரசியல் பொருளாதார, பாதுகாப்பு அமைப்பாகும்.
- 2001 ஆம் ஆண்டு இது நிறுவப்பட்டது.
இதன்முழு நேர உறுப்பினர்களாவன
- சீனா
- இரஷ்யா
- கஜகஸ்தான்
- உஸ்பெகிஸ்தான்
- தஜிகிஸ்தான்
- கிர்கிஸ்தான்
- இந்தியா
- பாகிஸ்தான்
- ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான், மங்கோலியா ஆகியவை நடப்பில் இந்த அமைப்பின் கூர்நோக்கு நாடுகளாக (Observer) உள்ளன.
- கூர்நோக்கு நாடுகளாக இருந்து வந்த இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்ற SCO மாநாட்டில் முழு உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டது.
- ஷாங்காய் ஐந்து (Shanghai Five) எனும் பெயரில் 1996 ஆம் ஆண்டு இரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளை கொண்டு சீனா-வால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
- 2005-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அஸ்தானா பிரகடனத்தின் மூலம் (Astana Declaration) SCO ஓர் பிராந்தியப் பாதுகாப்பு (Regional Security Organization) அமைப்பாக உருவானது.
- உறுப்பு நாடுகளிடையே இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதே (military cooperation) இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.