TNPSC Thervupettagam
October 10 , 2023 266 days 366 0
  • 2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஈரானிய ஆர்வலர் நர்கஸ் முகமதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இது ஈரானில் நிலவிய பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிரான அவரது போராட்டம் மற்றும் மனித உரிமைகள் மற்றும் அனைவருக்குமானச் சுதந்திரத்தைப் பெறுவதற்கான அவரது போராட்டத்திற்காக வழங்கப்படுகிறது.
  • திருமதி முகமதி தற்போது ஈரானில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
  • அரசினால் விதிக்கப்படும் மரணத் தண்டனைகள் அதிகளவில் பதிவாகும் நாட்டில் மரணத் தண்டனைக்கு எதிராக அவர் போராடி வருகிறார்.
  • மொத்தமாக அந்த நாட்டு அரசு அவரை 13 முறை கைது செய்துள்ளது, ஐந்து முறை குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளதோடு மொத்தம் 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 154 கசையடிகளையும் வழங்கியுள்ளது.
  • சிறையில் அடைக்கப்பட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவியதற்காக அவர் 2011 ஆம் ஆண்டில் முதன்முறையாக கைது செய்யப்பட்டார்.
  • இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிணையில் வெளிவந்த பிறகு, திருமதி முகமதி மரணத் தண்டனையை விதிப்பதற்கு எதிரான பிரச்சாரத்தில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டார்.
  • இது 2015 ஆம் ஆண்டில் அவரை மீண்டும் கைது செய்ய வழிவகுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்