சர்வதேச அணு ஆயுத ஒழிப்பு பிரச்சார அமைப்பு (ICAN – International Campaign to Abolish Nuclear Weapons) எனும் ஜெனிவாவைச் சேர்ந்த அமைப்புக்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ICAN ஆனது சர்வதேச அணு ஆயுத எதிர்ப்பு உடன்படிக்கையின் கீழ் அணு ஆயுதத்திற்கு எதிராக போராடிவரும் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள அரசு சாரா நிறுவனங்களின் கூட்டமைப்பு ஆகும்.
அமைதிக்கான நோபல் பரிசின் தனித்தன்மை
அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயின் நோபல் கமிட்டியால் அளிக்கப்படுகிறது.ஆனால் பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடனைச் சேர்ந்த ராயல் ஸ்வீடன் அகாடமியால் அளிக்கப்படுகிறது.
பொதுவாக நோபல் பரிசானது மூன்று நபருக்கு மேல் பகிர்ந்தளிக்கப் படுவதில்லை.ஆனால் அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் மூன்று பேருக்கு மேலுள்ள அமைப்பிற்கும் வழங்கப்படும்.