TNPSC Thervupettagam

அமைதித் திட்டம்

July 19 , 2018 2225 days 632 0
  • அடுத்த மாதம் ரஷ்யாவில் நடைபெற உள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான மெகா படைப்பயிற்சியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியன பங்கேற்க உள்ளன.
  • இது சாங்காய் கூட்டுறவு அமைப்பினால் (Shanghai Co-Operation Organization – SCO) ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.
  • பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை கையாளுவதில் உறுப்பினர் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பினை விரிவுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • இரஜபுத்திர படைவகுப்பின் 5வது படைப்பிரிவின் 200 வீரர்களையும் இந்திய வான்வெளிப் படையின் சிறிய நிறைவான எண்ணிக்கையிலான படையினையும் ”அமைதித் திட்டம் – 2018” என்று அழைக்கப்படும் படைப்பயிற்சிக்கு இந்தியா தேர்ந்தெடுத்துள்ளது.
  • ரஷ்யாவில் உள்ள தெற்கு உரால் மலைப்பகுதி சரிவில் உள்ள செபார்குல்ஷ்கி (துருக்கி மொழியில் இதன் அர்த்தம் – “அழகான, வண்ணமயமான ஏரி”) பயிற்சி மைதானத்தில் இப்பயிற்சி நடைபெறும்.
  • SCO-ன் மற்ற உறுப்பினர் நாடுகளான ரஷ்யா, கிர்கிஸ்தான், உஷ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான் ஆகியவற்றுடன் சேர்ந்து இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகியவற்றின் இராணுவங்கள் நட்பு ரீதியிலான இராணுவப் பயிற்சியில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.

இந்தியா – சீனா –  பாகிஸ்தான்

  • இந்தியா மற்றும் பாகிஸ்தான் படைகள் UN-ன் அமைதி காக்கும் படைகளின் கொடியின் கீழ் குறிப்பாக காங்கோவில் பல வருடங்களாக ஒன்றிணைந்து செயலாற்றி வருகின்றன.
  • இந்திய மற்றும் சீன இராணுவங்கள் “Hand in Hand” என்று பெயரிடப்பட்ட இருதரப்புப் பயிற்சித் தொடர்களில் 2007லிருந்து ஈடுபடுகின்றன. “Hand in Hand” பயிற்சி பயங்கரவாதத்திற்கு எதிரான போர்ப் பயிற்சியும் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்