TNPSC Thervupettagam

அமைதிப் படையில் பெண்களின் பங்கேற்பு

September 2 , 2020 1454 days 600 0
  • அமைதிப் படையில் அதிக அளவிலான பெண்களின் பங்கேற்பிற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை தீர்மானத்தில் இந்தியா இணைந்துள்ளது.
  • இந்தத் தீர்மானமானது இந்தோனேசியாவினால் சமர்ப்பிக்கப்பட்டு, இந்தியாவினால் வழிமொழியப் பட்டது.
  • ஐக்கிய நாடுகள் அமைதிப் படை நடவடிக்கைகளில் 5வது மிகப்பெரிய படை பங்களிப்பாளர் நாடு இந்தியாவாகும்.
  • இந்தத் தீர்மானமானது ஒருமித்த கருத்து அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு தரவின் படி, ஐக்கிய நாடுகள் அமைதிப் படையினரில் வெறும் 6% நபர்களே பெண்கள் ஆவர்.
  • மொத்தமாக ஐக்கிய நாடுகளில் 86,687 படைவீரர்கள் உள்ளனர். இதில் 5,243 பேர் பெண்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்