TNPSC Thervupettagam

அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா- பறவைகள் கணக்கெடுப்பு

January 7 , 2023 693 days 370 0
  • டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
  • அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட முதல் பறவை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை இந்தக் கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது.
  • இந்த கணக்கெடுப்பில் 141 இனங்களை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 17 புதிய இனங்களாகும்.
  • இதுவரை அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் 175 வகையான பறவை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • 2006 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 139 பறவை இனங்கள் அடையாளம் காணப்பட்டன.
  • 2014 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட இனங்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்தது.
  • இதன் முதல் கணக்கெடுப்பு 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் நடத்தப்பட்டது.
  • அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவினை தாவரவியலாளர் ராபர்ட் வைட் என்பவர் முதன்முதலாக 1847 ஆம் ஆண்டில் ஆய்வு செய்தார்.
  • இந்தப் பூங்காவானது, தென்னிந்தியாவின் ஐந்தாவது உயரமான சிகரமான முகூர்த்தி சிகரத்தின் அருகாமையில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்