சமீபத்தில், ஆராய்ச்சியாளர்கள் மேகாலயாவின் தெற்கு காரோ மலைப் பகுதி மாவட்டத்தில் உள்ள சிஜு குகையில் இருந்து ஒரு புதிய வகை தவளை இனத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இவை பொதுவாக ஒரு அடுக்கைச் சுற்றி காணப்படுகிறது, ஆனால் இந்த வகைத் தவளைகள் குழு ஒரு அசாதாரண வாழ்விடத்தில் வாழ்கிறது.
மார்மோரடஸ் குழுவின் வகையினைச் சேர்ந்த இது குகை சுற்றுச்சூழலில் வாழும் ஒரு புதிய இனமாகும்.
நாட்டில் குகைக்குள் இருந்து தவளைகள் கண்டுபிடிக்கப் படுவது இது இரண்டாவது முறையாகும்.
2014 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஒரு குகையில் இருந்து Micrixalus spelunca என்ற தவளை இனம் கண்டுபிடிக்கப் பட்டது.