இந்தத் தினமானது, 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதியன்று பிறந்த பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
அவர் இந்திய அரசியலமைப்பின் முதன்மைச் சிற்பி மற்றும் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், சட்ட நிபுணர், பொருளாதார நிபுணர் மற்றும் பெரும் சமூகச் சீர்திருத்தவாதி ஆவார்.
இந்தத் தினமானது முதல் முறையாக 1928 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதியன்று புனேவில் ஜனார்தன் சதாசிவ் ரணபிசாய் அவர்களால் அனுசரிக்கப்பட்டது.
அவரதுப் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு 1990 ஆம் ஆண்டில் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.