TNPSC Thervupettagam

அம்பேத்கர் ஜெயந்தி - ஏப்ரல் 14

April 16 , 2021 1232 days 626 0
  • இந்த ஆண்டு, அம்பேத்கர் ஜெயந்தியானது புகழ்பெற்ற இத்தலைவரின் 130வது பிறந்த நாளைக் குறிக்கிறது.
  • அம்பேத்கர் ஜெயந்தியானது இந்தியாவில் சமத்துவ தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • 2015 ஆம் ஆண்டு முதல் இது இந்தியா முழுவதும் அலுவல்பூர்வ பொது விடுமுறையாக அனுசரிக்கப் படுகிறது.
  • அவர் 1891 ஆம் ஆண்டின் ஏப்ரல் 14 ஆம் தேதியன்று மத்திய மாகாணத்தில் (தற்போதைய மத்தியப் பிரதேசம்) உள்ள நகர்ப்புற மற்றும் இராணுவப் பகுதியான ‘மோவ்' என்ற நகரில் பிறந்தார். (இப்போது இது அதிகாரப்பூர்வமாக டாக்டர் அம்பேத்கர் நகர் என்று அழைக்கப்படுகிறது )
  • இவர் சுதந்திர இந்தியாவின் முதல் சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சராவார் (1947 முதல் 1951 வரை).
  • இவர் இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று புகழப்படுகிறார்.
  • இவர் 1956  ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று தில்லியில் காலமானார்.
  • 1990 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயர்ந்த சிவில் கௌரவமான பாரத ரத்னா விருதானது இவருக்கு வழங்கப்பட்டது.
  • 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 முதல் மற்றும் 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 வரையிலான காலகட்டம் “சமூக நீதிக்கான ஆண்டு” என்று அனுசரிக்கப்பட்டது.
  • ஐக்கிய நாடுகள் சபையானது 2016, 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் அம்பேத்கர் ஜெயந்தியைக் கொண்டாடியது.
  • 2017 ஆம் ஆண்டு முதல், ஏப்ரல் 14 ஆம் நாள், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் அறிவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்