தமிழக அரசு இலவச அம்மா Wi-Fi மண்டலங்களை மாநிலத்தின் 5 நகரங்களில் துவங்கியுள்ளது.
இந்த Wi-Fi வசதியானது தினசரி பயன்பாட்டின் முதல் 20 நிமிடங்களுக்கு இலவசமாகும். அதன் பின் ஒவ்வொரு ஒரு மணி நேர பயன்பாட்டிற்கும் 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
மாநில அரசு நிறுவனமான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் நிறுவனத்தால் (Tamil Nadu Arasu Cable TV Corporation-TACTV) மொத்தம்50 கோடி ரூபாய் செலவில் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினா தொழிலாளர் சிலை, திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களின் மத்திய பேருந்து நிலையம், கோவையின் காந்திபுரம் மற்றும் மதுரையின் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் ஆகிய 5 இடங்களில் இந்த அம்மா இலவச வை-பை மண்டலம் தொடங்கப்பட்டுள்ளது.