TNPSC Thervupettagam

அம்மா இலவச வை-பை மண்டலங்கள்

April 9 , 2018 2292 days 791 0
  • தமிழக அரசு இலவச அம்மா Wi-Fi மண்டலங்களை மாநிலத்தின் 5 நகரங்களில் துவங்கியுள்ளது.
  • இந்த Wi-Fi வசதியானது தினசரி பயன்பாட்டின் முதல் 20 நிமிடங்களுக்கு இலவசமாகும். அதன் பின் ஒவ்வொரு ஒரு மணி நேர பயன்பாட்டிற்கும் 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
  • மாநில அரசு நிறுவனமான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் நிறுவனத்தால் (Tamil Nadu Arasu Cable TV Corporation-TACTV) மொத்தம்50 கோடி ரூபாய் செலவில் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.
  • சென்னை மெரினா தொழிலாளர் சிலை, திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களின் மத்திய பேருந்து நிலையம், கோவையின் காந்திபுரம் மற்றும் மதுரையின் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் ஆகிய 5 இடங்களில் இந்த அம்மா இலவச வை-பை மண்டலம் தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்