தமிழ்நாடு அரசானது மாநிலத்தில் மேலும் 189 அம்மா சிறு கூட்டுறவுச் சந்தைகளைத் திறக்க இருக்கின்றது.
தமிழ்நாடு முதல்வரான எடப்பாடி கே.பழனிசாமி இதுகுறித்த தகவலை மாநில சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
300ற்கும் மேற்பட்ட கட்டுப்படுத்தப்படாத பொருட்கள் அதிகபட்ச சில்லறை விலையை விட 50% குறைவாக தற்போது இயங்கிவரும் அம்மா சிறு கூட்டுறவுச் சந்தைகளில் விற்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சந்தைகள் நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் பொருட்கள் வழங்குவதையும் திறந்த வெளிச்சந்தைகளில் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.