தமிழ்நாடு மாநில அரசானது அம்மா முழு சுகாதார பரிசோதனைத் திட்டத்தின் முதலாவது ஆண்டுக் கொண்டாட்டத்தின் போது அத்திட்டத்தின் கீழ் அம்மா பிளாட்டினம் பிளஸ் என்ற சுகாதாரத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
அம்மா முழு சுகாதார பரிசோதனைத் திட்டமானது பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது.
அம்மா தங்கம் – ரூ.1000
அம்மா வைரம் – ரூ. 2000
அம்மா பிளாட்டினம் – ரூ. 3000
தற்பொழுது புதிய தொகுப்பானது ரூ.4000 மதிப்பிலான பரிசோதனையை அனுமதிக்கின்றது.