புவனேஸ்வரில் உள்ள மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் (CIFA) மரபணு ரீதியாக மேம்படுத்தப்பட்ட பல்வேறு வகையான கட்லா மீன் (லேபியோ கட்லா) மீன்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.
இது ஓராண்டில் 1.2 கிலோ எடையினை எட்ட முடிகின்ற உள்ளூர் இன மாதிரிகளை விட கூட்டு மீன் வளர்ப்பு முறைகளில் சராசரியாக 1.8 கிலோ வரையிலான எடையை எட்ட முடியும் என்ற திறனை நிரூபித்துள்ளது.
இது மீன் முட்டைகளின் தரம் மற்றும் மீன் விவசாயிகளின் வருமானத்தை மிக நன்கு மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது, அலங்கார மீன் வளர்ப்புத் துறைகளுக்கான ஒரு எண்ணிமத் தளமான ‘ரங்கீன் மச்லி’ என்ற செயலியும் அறிமுகப் படுத்தப் பட்டது.