மத்திய அரசானது, இந்திய ஆட்சிப் பணி பயிற்சி நிறுவனங்களின் மாநாட்டில், ‘அம்ரித் ஞான் கோஷ்’ இணைய தளம் மற்றும் ‘பயிற்று ஆசிரியர் மேம்பாட்டு இணைய தளம்’ ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அம்ரித் ஞான் கோஷ் இணைய தளமானது, இந்தியாவை மையமாகக் கொண்ட சில நிகழ்வாய்வுகளுடன் பகிரப்பட்ட தகவல் வங்கியை வழங்குகிறது.
பயிற்று ஆசிரிய மேம்பாட்டு இணைய தளமானது, அரசு ஊழியர்களுக்குத் தகவல் வழங்குதலை மேம்படுத்துவதற்காகப் பயிற்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கிறது.