TNPSC Thervupettagam

அம்ரித் தரோஹர் திட்டம்

February 3 , 2023 815 days 742 0
  • நகரங்களில் அமைந்துள்ள ஈரநிலங்களின் மீதான உகந்தப் பயன்பாட்டினை அதிகரிக்கச் செய்வதற்காகவும், அவற்றின் பல்லுயிர்ப் பெருக்கத்தை மேம்படுத்தச் செய்வதற்காகவும் அம்ரித் தரோஹர் திட்டத்தினை இந்திய அரசு அறிமுகப் படுத்தி உள்ளது.
  • இந்தத் திட்டமானது, உள்ளூர்ச் சமூகங்களின் உதவியுடன் நிலையான சுற்றுச்சூழல் மேம்பாட்டினை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது இந்த ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு முன்னுரிமை அம்சங்களில் ஒன்றான ‘பசுமை மேம்பாடு' என்பதன் கீழ் குறிப்பிடப்படுகிறது.
  • இத்திட்டமானது, அடுத்த மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
  • இந்தத் திட்டமானது, சுற்றுச்சூழல் சார்ந்தச் சுற்றுலா மற்றும் கார்பன் பங்குகள் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்வதோடு, அவை உள்ளூர்ச் சமூகங்களின் வருமான உருவாக்கத்திற்கும் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்