TNPSC Thervupettagam

அயர்லாந்து கருக்கலைப்பிற்கான வாக்கெடுப்பு

May 31 , 2018 2274 days 672 0
  • அயர்லாந்து வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்கள் கர்ப்பக் காலத்தின் முதல் 12 வாரங்களில் கருக்கலைப்புச் செய்திடுவதற்கு ஏதுவாக வாக்களித்துள்ளனர்.
  • இறுதி முடிவுகளில்4 சதவிகிதம் மாற்றத்திற்கு ஆதரவாகவும், 33.6 சதவிகிதம் எதிராகவும் இருந்தன.
  • இந்த வாக்கெடுப்பு அயர்லாந்தின் கருக்கலைப்பு சட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் உள்ள சட்டங்களுக்கு ஒத்துப் போவதாய் மாற்றும்.
  • அதன் அண்டை நாடான வடக்கு அயர்லாந்து இன்றும் கருக்கலைப்பிற்கான நடைமுறையில் முழுமையான தடையைக் கொண்டுள்ளது.

  • இந்த வாக்கெடுப்பு, 1983ம் ஆண்டு கத்தோலிக்க தேவாலயங்களின் வற்புறுத்தலுக்கு இணங்க எட்டாவது சட்ட திருத்தமாக அயர்லாந்தின் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.
  • இந்த திருத்தம் பெண்ணிற்கும், அவளின் பிறக்காத குழந்தைக்கும் சம உரிமைகளை வழங்குகிறது.
  • அயர்லாந்தின் பிரதமர் லியோ வரத்கார் இந்த வருட இறுதிக்குள் புதிய கருக்கலைப்புச் சட்டம் ஏற்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.
  • இந்த முன்மொழியப்பட்டுள்ள சட்டம், கர்ப்பக் காலங்களில் முதல் 12 வாரங்கள் வரையிலும், சில விதிவிலக்கான தருணங்களில் 24 வாரங்கள் வரையிலும் கருக்கலைப்பை அனுமதித்திடும்.

   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்