சமீபத்தில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகமானது உயிருள்ள அயற்பண்புடைய உயிரினங்களின் இறக்குமதி குறித்த அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
இந்தப் புதிய வழிகாட்டுதல்களின் படி, உயிருள்ள அயற்பண்புடைய உயிரினங்கள் CITES (Convention of International Trade in Endangered Species - அருகிவரும் உயிரினங்களின் மீது சர்வதேச வர்த்தகம் குறித்த ஒப்பந்தம்) என்பதின் பட்டியல் I, II, மற்றும் III-ன் கீழ் மட்டுமே கட்டுப்படுத்தப் படுகின்றன என்று இந்த அமைச்சகம் கூறியுள்ளது.
CITESன் பட்டியல் I-ன் கீழ் வர்த்தகம் நடைபெறுவதில்லை.
பட்டியல் II-ன் கீழ், வர்த்தகமானது சிறு அளவிலான அனுமதியுடன் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றது.
பட்டியல் III-ன் கீழ், பட்டியலிடப்பட்டுள்ள அதிக எண்ணிக்கையிலான பறவைகள் மற்றும் விலங்கினங்கள் மீது வர்த்தகம் செய்யலாம்.
உயிருள்ள அயற் பண்புடைய உயிரினங்கள் என்பவை தமக்குச் சொந்தமான இடத்திலிருந்துப் புதிய இடங்களுக்குச் செல்லும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் என்பதைக் குறிப்பதாகும்.
இந்தியாவில் காணப்படும் உயிருள்ள அயற் பண்புடைய உயிரினங்களில் மிகவும் பிரபலமானவை பந்து வகை மலைப்பாம்பு, கருஞ்சிவப்புக் கிளி, கடல் ஆமைகள், சுகர் க்ளைடர் என்ற விலங்கினம் (பெட்டாரஸ் பிரேவிசெப்ஸ்), சிறிய குரங்கு வகை உயிரினம் மற்றும் சாம்பல் வண்ண ஆப்பிரிக்கக் கிளிகள் ஆகியவையாகும்.