ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதில் மிக முக்கியப் பங்கு வகித்த டாக்டர் விஜய் ஜானகிராமனுக்கு தமிழ்நாடு அரசு 'தமிழ் மாமணி' விருதினை வழங்கியுள்ளது.
சிறந்தக் கலாச்சாரத் தூதர் விருது ஆனது இலங்கையைச் சேர்ந்த கிருஷ்ணகாந்தன் சந்தீப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
கனியன் பூங்குன்றன் விருதுகள் பின்வரும் ஆறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக (NUS) பதிவாளர் இராஜாராம் இராமசுப்பன் கல்வி பிரிவின் கீழ் இந்த விருதைப் பெற்றுள்ளார்.
மறைந்த சமூக சீர்திருத்தவாதி 'பெரியார்' ஈ.வெ. இராமசாமி அவர்களின் வரலாற்றை ஜப்பானிய மொழியில் வெளியிட்ட S.கமலக்கண்ணனுக்கு சமூக மேம்பாட்டுப் பிரிவின் கீழ் விருது வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் பிரிவின் கீழ் புதுமை தமிழச்சி அறக்கட்டளையின் ஸ்ரீதேவி சிவானந்தம் விருது பெற்றுள்ளார்.
வணிகப் பிரிவின் கீழ் டெக்டன் பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனத்தின் L.L.C. இலட்சுமணன் சோமசுந்தரம் விருதுகளைப் பெற்றுள்ளார்.
தென் கொரியாவின் செஜோங் பல்கலைக் கழகத்தின் ஒரு இணைப் பேராசிரியரான S.ஆரோக்கியராஜ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் கீழ் விருதுகளைப் பெற்று உள்ளார்.
NUS (the National University of Singapore) பல்கலைக்கழகத்தின் கண் மருத்துவர் கங்காதர சுந்தர் மருத்துவப் பிரிவின் கீழ் விருதுகளைப் பெற்றுள்ளார்.