தீபாவளி கொண்டாட்டங்களை அயோத்தியா நகரத்தில் அனுசரிப்பதற்காக நடத்தப்பட்ட நிகழ்வான அயோத்தியா தீப உத்சவ் 2018 உலக சாதனைகளுக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றது.
இது சரயு நதிக்கரையில் 3,01,152 அகல் விளக்குகளை தீபம் ஏற்றிய சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இதற்கு முந்தைய சாதனையானது 2016 ஆம் ஆண்டு ஹரியானாவின் சிர்சாவில் 1,50,009 விளக்குகளை வெளிப்படுத்தி மிகப்பெரிய நிகழ்ச்சியை நடத்திய தேரா சச் சௌதாவால் நிகழ்த்தப்பட்டது.
இந்த தீப உத்சவ் நிகழ்ச்சியானது உத்தரப் பிரதேச அரசின் சுற்றுலாத் துறை மற்றும் கலாச்சாரத் துறையின் முயற்சியாகும். இது ராமன் ராவணனை வீழ்த்திய வெற்றிக்காகவும் அதன்பின் தனது அரசான அயோத்தியாவிற்குத் திரும்பியதை நினைவு கூறுவதற்காகவும் கொண்டாடப்படுகிறது.