அரசாங்க இணையதளத்தில் அரசாணைகளை வெளியிடல் – தமிழ்நாடு
January 6 , 2025 16 days 98 0
பல அரசுத் துறைகள் ஆனது பல ஆண்டுகளாக அவற்றினால் பிறப்பிக்கப்பட்ட ஒரு அரசாணையை (G.O.) கூட பொது தளத்தில் வெளியிடவில்லை.
சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் காடுகள், உள்துறை மற்றும் ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை (RD&PR) ஆகியவை அரசாணைகளை வெளியிடுவதில் வேறு பல துறைகளை விட மிகவும் முன்னிலையில் உள்ளன.
தமிழ் மொழி மேம்பாடு மற்றும் செய்தித் துறையானது கடந்த 20 ஆண்டுகளாக எந்த அரசாணையையும் இணையதளத்தில் வெளியிடவில்லை.
பொது (தேர்தல்) துறை ஆனது பல ஆண்டுகளாக ஒரு அரசாணையைக் கூட இன்னமும் வெளியிடாத மற்றொரு துறையாகும்.
இந்தத் துறையானது கடைசியாக 2015 ஆம் ஆண்டு மே மாதத்தில் பொது தளத்தில் அரசாணையினை வெளியிட்டது.
கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறை, அதன் பிரிவில் கடந்த சுமார் ஆறு ஆண்டுகளாக எந்தவொரு அரசாணையினையும் தன் தளத்தில் வெளியிட வில்லை.
சிறந்த செயல்திறன் கொண்ட சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத் துறை ஆனது 2024 ஆம் ஆண்டில், அதன் பிரிவில் சுமார் 110 அரசாணைகளை வெளியிட்டு உள்ளது.
உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை சுமார் 60 அரசாணைகளை வெளியிட்டு உள்ளது; RD&PR துறையானது 54 அரசாணைகளையும்; மற்றும் நீர்வளத்துறை சுமார் 30 அரசாணைகளையும் வெளியிட்டுள்ளது.