அரசாங்கத்தின் மொத்த சந்தை கடன்கள்
December 5 , 2024
18 days
90
- 2024-2025 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் தமிழக மாநில அரசின் மொத்த சந்தைக் கடன்கள் 50,000 கோடி ரூபாயாக இருந்தது.
- தமிழ்நாடு அரசானது, மாநில மேம்பாட்டுக் கடன்கள் (SDLs) எனப்படும் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் சந்தையில் இருந்து கடன் பெறுகிறது.
- 2024-2025 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில், மொத்தமாக சுமார் 64,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் பெற்ற மாநிலமாக மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
- அதைத் தொடர்ந்து 44,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுடன் ஆந்திரப் பிரதேசம் இடம் பெற்றுள்ளது.
- 2024-25 ஆம் ஆண்டின் முதல் பாதியில் தமிழகத்தின் மொத்த வருவாய் வரவுகள் சுமார் 1,23,970.01 கோடி ரூபாய் ஆகும்.
- இது 2024-25 ஆம் ஆண்டிற்கான மாநில நிதிநிலை மதிப்பீட்டில் 41.46% ஆகும்.
- தமிழகத்தின் மொத்த வருவாய் வரவுகளில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SOTR) 75.6% ஆகும்.
- மீதமுள்ள 24.4% ஆனது வருவாய் வரவுகள் ஆனது மத்திய அரசின் வரிகள் மற்றும் மானியங்களின் பங்கில் இருந்து பெறப்படுகின்றன.
- 2024-25 ஆம் ஆண்டின் முதல் பாதியில் தமிழ்நாட்டின் வருவாய்ப் பற்றாக்குறை ஆனது, வரவுகளை விட செலவினம் அதிகமாக இருப்பதைக் குறிக்கிறது.
- மொத்த வரவு மற்றும் மொத்தச் செலவினங்களுக்கு இடையேயான வித்தியாசமான நிதிப் பற்றாக்குறையானது 53,934.32 கோடி ரூபாயாக இருந்தது.
Post Views:
90