2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் பதிவான 87,416 கோடி ரூபாய் உபரித் தொகையை மத்திய அரசுக்குப் பரிமாற்றுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது முந்தைய ஆண்டில் செலுத்தியதை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.
2021-22 ஆம் ஆண்டிற்கான ஈவுத் தொகை 30,307 கோடி ரூபாயாக இருந்தது.
எதிர்பாராத இடருக்கான இடைநிலைத் தொகையினை 6 சதவீதமாக வைத்திருப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் வாரியமானது, சுமார் 5.50 சதவீதமாக இருந்த எதிர்பாராத இடருக்கான இடைநிலைத் தொகையினை 6 சதவீதமாக உயர்த்தியுள்ளது.