இந்திய ரிசர்வ் வங்கியானது, அரசாங்க கடன் தள்ளுபடி திட்டத்தில் (DRS) பங்கேற்பது தொடர்பாக கடன் வழங்கீட்டு நிறுவனங்களுக்கான சில கொள்கைகளை வகுத்து உள்ளது.
இதில் வட்டி முறையை மற்றும்/அல்லது அசல் தொகையை கைவிடுதல் மற்றும் கடன் கணக்கு நிலை அடங்கும்.
கடனாளிகளுக்குக் கடனிலிருந்து நிவாரணம் வழங்குவதற்காக மாநில அரசுகள் DRS அறிவிப்பதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதில் இயற்கைப் பேரிடர்களின் போது அறிவிக்கப்படுகின்ற விவசாயிகள் கடன் தள்ளுபடி அல்லது அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்னதாக ஒரு குறிப்பிட்ட கடன் பெற்ற பிரிவினருக்கு உறுதியளிக்கும் தள்ளுபடிகள் ஆகியவை அடங்கும்.
வசூலிக்கப்பட்ட ஆனால் வரவு வைக்கப்படாத வட்டி மற்றும்/அல்லது அசல் தொகை செலுத்தலில் தள்ளுபடி என்பது ஏதேனும் ஒரு சமரசத் தீர்வாகக் கருதப்படும்.
இது வழக்கமான ஒதுக்கீடு மற்றும் சொத்து வகைப்பாடு விதிமுறைகளுக்கு உட்படும்.